நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்கள்! பலியானவர்களின் எண்ணிக்கை

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், ஏனைய 7 மரணங்கள் ஏற்கனவே வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 8 வாகனச் சாரதிகளும், 7 பாதசாரிகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வாகனம் செலுத்தும் போது சாரதிகள் அவதானத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதுடன், பாதுகாப்பு வழிகாட்டல்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து விதிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *