MV X-Press Pearl கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல முடியவில்லை காரணம் !! கப்பல் தரை தட்டியது – டைட்டானிக் கப்பலை போல மூழ்க வாய்ப்புள்ளதாக தகவல்!!!!

கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் தீப்பற்றிய MV X-Press Pearl கப்பல் தற்போது தரை தட்டியுள்ளது.

கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு நேற்றுமுற்பகல் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், கப்பலின் பிற்பகுதி தரை தட்டியமையினால் ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கப்பலின் பின்பகுதி நேற்று மாலை 3 மணியளவில்  தரை தட்டியதாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திற்காக முன்நிற்கும் MTI Network நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய வலயத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் அன்ரு லிஹீ தெரிவித்தார்.

எனினும், கப்பலின் முன்பகுதி தொடர்ந்தும் மிதந்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

கப்பலின் கொள்கலன்களை ஏற்றிய பகுதியில் தொடர்ந்தும் புகை வௌியேறுவதாகவும் அன்ரு லிஹீ கூறினார்.

இலங்கை கடற்படை அணியொன்று நேற்று முற்பகல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல முயற்சித்த போதிலும் பின்னர் அதனை கைவிட வேண்டி ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *