மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள சேவையை பெற விரும்புவோருக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்!!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் சேவையைப் பெற விரும்பும் பொதுமக்களுக்கு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி திணைக்களத்தில் சேவையைப் பெற வருவதற்கு முன் 011 2 677 877 என்ற இலக்கத்தை அழைத்து ஒரு திகதி அல்லது நேரத்தை பதிவு செய்ய வேண்டும்.
கடமை நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாகனப் பதிவுகளுக்கு 0707 677 877 என்ற இலக்கத்தை அழைக்கவும்.
ஓட்டுநர் உரிமங்களுக்கு 0707 677 977 என்ற எண்ணை தொடர்பு கொள்ள திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அலுவலக நேரங்களுக்குப் பிறகு உங்கள் சந்தேகங்களை இந்த தொலைபேசி எண்களுக்கு வாட்ஸ்அப், வைபர் அல்லது எஸ்எம்எஸ் வழியாக அனுப்பலாம். மோட்டார் போக்குவரத்து துறையின் மாவட்ட அலுவலகங்களின் செயல்பாடுகளும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது