எம்.ஜி.ஆர். இடத்தை விஜய் நிரப்புவாரா? – அமைச்சர் பதில்

எம்.ஜி.ஆர் போல் விஜய்யின் புகைப்படத்தை வைத்து போஸ்டர் ஒட்டி இருப்பது குறித்து கேள்வி கேட்டதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், இப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. விஜய்யின் ரசிகர்கள் அடிக்கடி போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவார்கள்.
இந்நிலையில், எம்ஜிஆரை போலவே விஜய்யை உருவகப்படுத்தி அவரது ரசிகர்கள் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். எம்ஜிஆர் நடித்த இதயகனி, ரிக்சாக்காரன், உரிமைக்குரல் உள்ளிட்ட போஸ்டர்களை போலவே விஜய்யின் போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் போஸ்டர் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பிய போது, நடிகர் விஜய்யால் எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப முடியாது. எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் மாறிவிட முடியாது என்று பதிலளித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *