பட்டப்பகலில் மன்னாரில் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை!!
மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான அப்துல் ரசாக் முஹமது ஹவ்ஸ் (வயது-51) என தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26) காலை 11 .30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன், சடலத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுவதான கூறியுள்ளனர்.
இதே வேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் மன்னார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.