நாட்டில் பள்ளி மாணவர்களிடையே தொற்று மூலம் வேகமாக பரவும் தொழுநோய்….. இதுவரையில் 500 பேர்!!

இலங்கையில் வேகமாக தொழுநோய் பரவி வருவதாக தேசிய தொழுநோய் பிரசார பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொழுநோய் எதிர்ப்பு பிரசாரப் பிரிவின் தகவல்படி,

மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட,

நாடு தழுவிய திட்டத்தைத் தொடர்ந்தே எண்ணிக்கையில் அதிகரிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையத்தின் தகவல்படி,

95 சதவீத மனிதர்களில் தொழுநோயை ஏற்படுத்துவதற்கு பக்டீரியாக்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இரண்டு வகையாக தொழுநோய் பரவுகிறது.

அவை தொற்றக்கூடியவை மற்றும் தொற்றாதவை.

துரதிர்ஷ்டவசமாக,

இதுவரை கண்டறியப்பட்ட தொழுநோயில் 60 சதவீதமானவை தொற்றக்கூடியவை இது கவலை தருகின்றது.

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 170க்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்,

நாட்டில் மொத்தமாக இதுவரை 500 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 126 பேரும், கம்பஹாவில் 114 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 82 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *