கொரோனா சிகிச்சை பெற்ற இளம்நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்கள்

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கன்னட இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத், இவர் கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா போன்ற படங்களை தயாரித்து நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

மேலும், ஜீரோ பர்சன்ட் லவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார். இந்தப் படத்தை வருகிற ஜூன் 22-ந் தேதி தனது பிறந்த நாளன்று வெளியிடவும் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், மஞ்சுநாத்துக்கு, கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இருந்தாலும், அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

35 வயதே ஆன இளம் கன்னட நடிகர் உயிரிழந்த சம்பவம் கன்னட சினிமா திரையுலகினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *