‘கொம்புவச்ச சிங்கம்டா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.
மேலும்,
கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, ஸ்ரீ பிரியங்கா, தீபா ராமனுஜம் மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் நவம்பர் 26ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Release Date Announcing video ஐ Soori Twitter பதிவில் பார்வையிட இங்கே Click செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *