“9 கோடியே 82 லட்சம் ரூபா” மிகப்பெரிய லொத்தர் பரிசு ஒன்றை வென்ற கிளிநொச்சி பெண்!!

கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்ற பெண்ணொருவர் மிகப்பெரிய லொத்தர் பரிசு ஒன்றை வென்றுள்ளார்.

அபுதாபியில் நடைபெற்ற லொத்தர் சீட்டிழுப்பின் மூலம் இலங்கை நாணயத்தில் 9 கோடியே 82 லட்சம் ரூபா பரிசாக வென்றுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்த அவர் திருமணத்திற்குப் பிறகு அபுதாபியில் வேலைக்குச் சென்றார்.

அங்கு வாங்கிய லொத்தர்சீட்டுக்கு ஒரு மில்லியன் அபுதாபி திர்ஹம்(Abu Dhabi Dirham) [98252277.32 ரூபாய்] கிடைத்துள்ளது.

80 லொத்தர் சீட்டுகளை வாங்கிய அருள்சேகரம் செல்வராணி என்ற பெண் விடுமுறைக்காக தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில்,

அவரது லொத்தர் பரிசு தொடர்பில் குறித்த லொத்தர் நிறுவனமே தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *