கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனை வைத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்கிறது. இதனை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளது.

மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இவர் தற்போது டான், அயலான், சிங்கப்பாதை, எஸ்கே20 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர், இயக்குனர் என பல பரிணாமங்களில் பயணிக்கும் கமல்ஹாசன் அவருடைய தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல் பல படங்களை தயாரித்துள்ளது. அந்த நிறுவனத்தின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை கமல்ஹாசன் அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “சில வேலைகள் சந்தோசத்தை தரும், சில கௌரவத்தையும், பெருமையையும் தரும் சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப்படம் அனைவருக்குமே பெருமை தேடித்தரும் தம்பி சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி போன்ற இளையோருடன் பயணிப்பதில் மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் அவருடைய நூறாவது படமான ‘ராஜபார்வை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக களம் இறங்கினார். ராஜ்கமல் பில்ம்ஸ் இன்டர்நேஷனல் என்று தனது நிறுவனத்துக்கு அவர் பெயரிட்டார். இந்த நிறுவனம், விக்ரம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ஹே ராம், விருமாண்டி, விஸ்வரூபம் போன்ற பல படங்களை தயாரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *