மர்மமான முறையில் உயிரிழந்த  தந்தையும் மகளும் (படங்கள்)!!

களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த  தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

களுத்துறை, ஹீனடியங்கல, கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது மகள் சமரசிங்க சச்சித்ரா ஹன்சமலி ஜயசிங்க (33) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர்.

குறித்த வீட்டில் தந்தையும் மகளும் தங்கியிருந்ததுடன்,

தந்தை நாற்காலியில் சடலமாக கிடந்ததாகவும்,

மகள் அறையில் தரையில் சடலமாக கிடப்பதாகவும், காவல்துறை அவசர பதில் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை தெற்கு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *