நாட்டில் உணவு நெருக்கடியை சமாளிக்க இன்னொரு அரசு உதவி!!
இலங்கையின் உணவு நெருக்கடியை சமாளிக்க ‘ஜப்பான் அரசாங்கம்’ நிதியுதவி வழங்கியுள்ளது.
இதற்காக,
ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவதற்காக இலங்கைக்கு ஜப்பானின் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக,
இலங்கையின் நெருக்கடியை தீர்க்கும் முகமாக ஜப்பான் அரசு 5 பில்லியன் நிதியுதவி வழங்குவதாக ஜப்பான் தூதுவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளித்திருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.