வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளது!!

யாழ் வடமராட்சி – வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நேற்று (15) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழமையை விட நேற்றைய தினம் பக்த அடியவர்கள் குறைவாக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள்  களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது.

அவ்வாறு களவாடப்பட்ட ஐந்து தங்க சங்கிலிகளும்,

8 அரை பவுண் நிறையுடைய சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *