யாழில் இளைஞன் தற்கொலை!!
யாழ் இந்துக்கல்லுாரி பழைய மாணவன் அமிர்தலிங்கம் அகிலன் எனும் 31 வயதான ஜிம்னாஸ்டிக் வீரர் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.
NDB வங்கி ஒன்றின் உத்தியோகத்தராக கடமையாற்றுபவராகவும் மிகவும் நட்புடன் அனைவருடன் பழகும் இவர் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார்.
தற்கொலைக்கு முன்னைய தினமும் கொக்குவில் இந்துக்கல்லுாரியில் தான் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னரே அவர் தற்கொலை செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஒரு பெண் குழந்தைக்கு தந்தையான இவரின் இழப்பு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது,