யாழில் கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்!!
தவறாக தடுப்பூசியை போட்டு விட்டோம் என்பதற்காக எந்த வகையிலும் கர்ப்பிணிகள் தமது கர்ப்பத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடாதென மகப்பேற்று, பெண்ணியல் வைத்திய நிபுணர் அ.சிறிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொரோனா தொடர்பான விழிப்புணர்வு ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏழு கர்ப்பிணிப் பெண்கள் இறந்திருக்கின்றனர். இரண்டு மாதங்களுக்குள் இது மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.இதுவே இந்த கொரோனா தொற்று தாக்கத்தின் கடுமையை உணர்த்தும்.