யாழ் – கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை!!
யாழ்ப்பாணம் – கோவில் வீதி பகுதியில் புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்த ஒருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் அதனை வீதியில் நிறுத்திவிட்டு புகையிரதத்தில் பாய்ந்தார் என அங்கு நின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.