யாழில் காதல் தோல்வியால் யுவதி எடுத்த விபரீத முடிவு -துயரத்தில் பெற்றோர்

காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தவறான முடிவெடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த உலகேந்திரம் விதுஷிகா (வயது 23) என்ற யுவதியே உயிரிழந்தவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி ஒரு வருடமாக தொலைபேசியில் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் தனது காதலனிடம் திருமணம் செய்யுமாறு கோரி வந்துள்ளார்.அதற்கு குறித்த இளைஞன் பெற்றோரை கேட்டு சொல்கின்றேன் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.

அதன் பின்னர் ஒரு மாதமாக இளைஞன் தொடர்பு கொள்ளாமல் தவித்து வந்துள்ளார்.இதனால் மன விரக்தி அடைந்த யுவதி கடந்த 21 ஆம் திகதி இரவு வீட்டில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார்.

தீக்காயத்திற்குள்ளான யுவதி உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap