யாழ் – வடமராட்சியில் புட்டு புரைக்கேறி 21 வயது இளைஞன் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (15/11/2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறைகற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (21 வயது) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது அது புரைக்கேறி உள்ளது.

அதனை தொடர்ந்து,

தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது வீட்டிலுள்ளவர்கள் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர்.

சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து இளைஞனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது

இளைஞன் உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உடற்கூற்று பரிசோதனையில்,

சுவாச குழாய்க்குள் உணவு மாதிரிகள் காணப்பட்டதை அடுத்து சுவாச குழாய்க்குள் உணவு பதார்த்தம் அடைத்து கொண்டமையாலையே மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *