இரணைமடுவில் தடம்புரண்டு விபத்திற்குள்ளான யாழ் – கொழும்பு சொகுசு பேருந்து….. 22+ பேர் படுகாயம்!!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(02/12/2022) காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *