இதுவரை யாரும் இல்லை.. IPL தொடரில் முதல் வீரராக சாதனை படைத்த ஜடேஜா
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சென்னையில் ஆர்சிபி அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் சென்னை அணி தோல்வியை தழுவினாலும் ஐபிஎல் தொடரில் யாரும் படைக்காத மிகப்பெரிய சாதனை ஒன்றை சிஎஸ்கே அணி வீரர் ஜடேஜா படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் ஜடேஜா 19 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 3 ஆயிரம் ரன்கள் மற்றும் 100-க்கும் அதிகமான விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக ரசல் உள்ளார். ஐபிஎல்லில் 1000 ரன்களுக்கு மேல் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் பட்டியல்:-
ரவீந்திர ஜடேஜா – 3001 ரன்கள் மற்றும் 160 விக்கெட்டுகள்
ஆண்ட்ரே ரசல் – 2488 ரன்கள் மற்றும் 115 விக்கெட்டுகள்
அக்சர் படேல் – 1675 ரன்கள் மற்றும் 123 விக்கெட்டுகள்
சுனில் நரைன் – 1578 ரன்கள் மற்றும் 181 விக்கெட்டுகள்
டுவைன் பிராவோ – 1560 ரன்கள் மற்றும் 183 விக்கெட்டுகள்