இணையத்தில் லீக் ஆன ரியல்மி 7 வீடியோ

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7 ஸ்மார்ட்போன் வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

ரியல்மியின் புதிய ரியல்மி 7 ஸ்மார்ட்போன் அன்பாக்சிங் வீடியோ இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. லீக் ஆன வீடியோவில் ரியல்மி 7 ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருந்தது. இத்துடன் ரியல்மி 7 ஸ்மார்ட்போன் விவரங்களும் தெரியவந்துள்ளது.
அந்த வகையில் புதிய ரியல்மி 7 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 90 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 64 எம்பி குவாட் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
ரியல்மி 7 மாடலின் குவாட் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்படும் என்றும் பேக் பேனலில் ரியல்மி பிராண்டிங் வழங்கப்படுகிறது. செல்ஃபி கேமராவுக்கென ஸ்கிரீனின் இடதுபுற ஓரத்தில் பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்படுகிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்படுகிறது.
புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. ஸ்மார்ட்போனை சுற்றி தடிமனான பெசல்கள் காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *