இந்திய விசா விண்ணப்பங்கள் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும்….. இந்திய உயர் ஸ்தானிகராலயம்!!

இந்திய விசா விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்களில் IVS மையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இன்று(02/07/2022) அறிவித்துள்ளது.

இந்திய விசா விண்ணப்பங்கள் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும்

அவுட்சோர்ஸ் விசா விண்ணப்ப மையத்தின் (outsourced visa application centre) மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்று உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

புதிய விசா ஏற்பு அட்டவணை ஜூலை 4 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *