ஆழ் கடலில் இந்திய கடற்படையினரால் இலங்கையர்களுக்கு நடந்த கொடுமை – வெளிவந்த தகவல்!!

இந்திய கடற்படையால் அழ் கடலில் வைத்து இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்திய அரசுடன் கலந்துரையாடல் நடைபெறும் என்று மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடல் நட்பு அடிப்படையில் நடைபெறும் என்றும், தாக்குதல் குறித்து கலந்துரையாடுவதற்கு முன், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் இலங்கை மீனவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் மீன்வளத்துறை அமைச்சின் செயலாளர் இந்து ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.

இதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

13 மீனவர்கள் அடங்கிய குழு பல நாள் மீன்பிடி  படகுகள் இரண்டில் மே மாதம் 7ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக ஆழ் கடலுக்குச் சென்றனர்.

இவ்வாறு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்திய கடற்படையால் ஆழ்கடலில் வைத்து தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான மீனவர்கள் திக்கோவிட்ட துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளனர்.

மேலும், இந்திய கடற்படை ஜூன் 04 ஆம் திகதி சர்வதேச கடல் எல்லையில் அவர்களை நிறுத்தி, போதைப்பொருட்கள் படகில் உள்ளதா என தேடுதல் நடத்தியதுடன், இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *