மீண்டும் பூஜையுடன் தொடங்கியது “இந்தியன்-2” படப்பிடிப்பு!!
கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ படம் இயக்கப் போவதாக சங்கர் அறிவித்தார்.
அதன்பின்,
படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது.
பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.
அதன்பின்,
சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.
‘விக்ரம்‘ பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன்
இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்‘ என தெரிவித்திருந்தார்.
இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது.
இதனை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில்,
‘இந்தியன்-2‘ படப்பிடிப்பு மீண்டும் பூஜையுடன் இன்று(24/08/2022) தொடங்கியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான Lyca நிறுவனத்தின் உத்தியோகபூர்வ Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக……..
இதனுடன்,
பூஜையில் எடுக்க்ப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.