வடக்கின் எட்டு பிரபல இடங்களில் Drone கமராக்களை பொருத்துவதற்கு அனுமதி கோரியுள்ள இந்தியா!!

வடக்கு மாகாணத்தில் மன்னார் தீவின் மணல் திட்டுகள் உட்பட பல இடங்களில் ஆளில்லா விமான கமராக்களை பொருத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் இந்தியா அனுமதி கோரியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

யோகா பயிற்சிகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்துக்காக என தெரிவித்து இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அனுமதியை இலங்கை அரசிடம் கோரியுள்ளது.

மன்னாரின் மணல் திட்டுகள்,

மன்னாரின் இராட்சத மரம் மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட எட்டு பிரபலமான இடங்களில் ஆளில்லா விமானக் கமராக்களை பொருத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது என அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *