இந்தியாவில் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் வெளியீடு

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் மாடல்கள் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி டேப்லெட்களான- கேலக்ஸி டேப் எஸ்7 மற்றும் டேப் எஸ்7 பிளஸ்  சாதனங்களை அறிமுகம் செய்தது. கேலக்ஸி நோட் 20 மற்றும் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா முன்பதிவு துவங்கிய நிலையில், தற்சமயம் கேலக்ஸி டேப் எஸ்7 சீரிஸ் முன்பதிவு துவங்கி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 வைபை 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 55,999 என்றும், எஸ்7 4ஜி வேரியண்ட் 128 ஜிபி மாடல் விலை ரூ. 63,999 என்றும் கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் 4ஜி வேரியண்ட் விலை ரூ. 79,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய சாம்சங் டேப்லெட்கள் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்கள், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் எஸ்7 பிளஸ் வைபை வேரியண்ட் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 மாடலில் 11 இன்ச் WQXGA எல்டிபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4ஜி (ஆப்ஷனல்), வைபை 6, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட், 8000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *