இந்தியாவில் பட்ஜெட் விலையில் விவோ வை20 சீரிஸ் அறிமுகம்

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் விவோ வை20ஐ மற்றும் வை20 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது.

விவோ நிறுவனம் இந்தியாவில் வை20 மற்றும் வை20ஐ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றில் 6.51 இன்ச் ஹெச்டி பிளஸ் ஹாலோ ஐவியூ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்ரம் வழங்கப்பட்டு இருக்கிறது.

விவோ வை20 மற்றும் வை20ஐ சிறப்பம்சங்கள்:
– 6.51 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
– அட்ரினோ 610 ஜிபியு
– 3 ஜிபி (வை20ஐ) / 4 ஜிபி (வை20) ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
– 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
– 2 எம்பி டெப்த் சென்சார்
– 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
– 8 எம்பி செல்ஃபி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– மைக்ரோ யுஎஸ்பி
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ வை20ஐ ஸ்மார்ட்போன் டான் வைட் மற்றும் நெபுளா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11,490 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது. விவோ வை20 ஸ்மார்ட்போன் ஆப்சிடியன் பிளாக் மற்றும் டான் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *