“தாய்வானை உக்ரைனாக மாற்ற அனுமதிக்க மாட்டேன்…..” ஜனாதிபதி தேர்தல் சுயேச்சை வேட்ப்பாளர் ‘டெர்ரி கோவ்’!!
தாய்வான்(Taiwan) ஜனாதிபதி தேர்தல் அடுத்தாண்டு நடக்க உள்ள நிலையில்,
பாக்ஸ்கான் நிறுவனர் டெர்ரி கோவ்(Boxcon founder Terry Gove) தாய்வான் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்துள்ளார்.
உலகின் மிக பெரிய தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ்கானின் தலைமை அலுவலகம் தாய்வானில் உள்ளது.
பாக்ஸ்கானின் அப்பிள் ஐபோன் உற்பத்தி
ஆலைகள்(Apple iPhone manufacturing plants) உலகெங்கும் உள்ளன.
இந்நிலையில்,
தாய்வானின் ஆளும் ஜனநாயக முற்போக்கு கட்சியை அவர் கடுமையாக விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
“ஆளும் கட்சியின் கொள்கைகளால் தான் தாய்வானுக்கும் – சீனாவுக்கும் இடையே போர் ஆபத்து உருவாகியுள்ளது.
தாய்வானை உக்ரைனாக மாற்ற அனுமதிக்க மாட்டேன்” என்றார்