இணையத்தில் வெளியான 2021 கேடிஎம் ஆர்சி 200 ஸ்பை படங்கள்
கேடிஎம் நிறுவனத்தின் 2021 ஆர்சி 200 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கேடிஎம் ஆர்சி சீரிஸ் 2021 அப்டேட் செய்யப்பட்ட மாடல் விரைவில் அறிமுகமாக இருக்கின்றன. இந்நிலையில், 2021 கேடிஎம் ஆர்சி 200 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. ஸ்பை படங்களில் புதிய ஆர்சி 200 விவரங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 மாடல் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஹெட்லேம்ப் டிசைன் கொண்டிருக்கிறது. இது தற்போதைய மாடலில் உள்ள டூயல் ப்ரோஜெக்டர் ரக ஹெட்லேம்ப்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
2021 கேடிஎம் ஆர்சி 200 மாடலில் ஹாலோஜன் ரக யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் எல்இடி டிஆர்எல் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் வைசர் அளவில் பெரியதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இத்துடன் மேம்பட்ட கிராபிக்ஸ் காணப்படுகிறது.
புதிய ஆர்சி 200 மாடலில் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட என்ஜினே வழங்கப்படலாம். தற்போதைய ஆர்சி 200 மாடலில் லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர், 199 சிசி யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 24.6 பிஹெச்பி பவர், 19.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.