இலங்கையில் இழுவை படகு ஒன்றில் பிடிபட்ட்து 800 கிலோ பாரிய சுறா மீன்!!
வெலிகம, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் 800 கிலோ கொண்ட பாரிய சுறா ஒன்று 176,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
“சோஹன்சா” என்ற பல நாள் இழுவை படகு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, கடற்கரையில் இருந்து இருபத்தைந்து கடல் மைல் தொலைவில் மீன்பிடி வலையில் சுமார் 800 கிலோ எடையுள்ள சுறா சிக்கியது.B இல்லை
அதன்பின்,
15 மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த சுறாவை இழுத்துச் சென்ற படகின் மீனவ தலைவர் ரஞ்சித் அபேசுந்தர மற்றும் மீனவர்கள் குழுவினர் நேற்று(01/05/2022) காலை மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் அதனை பிடிக்க முற்பட்டுள்ளனர்.
அந்த வாய்ப்பு கூட அவ்வளவு எளிதாக அமையவில்லை.
பின்னர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அதை மேலே தூக்கி கரைக்கு கொண்டு வரப்பட்டது.
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு விற்பனை செய்ப்பட்டது.