ஜப்பானில் வருடப்பிறப்பில் பாரிய நிலநடுக்கம் – 30+ மரணங்கள்….. இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கம் என எச்சரிக்கை!!

ஜப்பானில் நேற்று (01/01/2024) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 30 பேர் உயிரிழந்ததுடன் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

7.6 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்ததுடன் வீதிகள் பிளந்து கடுமையாக சேதம் அடைந்தன.

அத்துடன்,

மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது தளர்த்தப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் நேற்றைய புத்தாண்டு தினத்தில்(01/01/2024) இருந்து இன்று வரை அதிர்ந்து கொண்டே இருந்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,

மொத்தமாக 155 முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3 இற்கும் அதிகமா பதிவாகியுள்ளனளன.

இந்த நிலநடுக்கம் காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரையோர பகுதிகளில் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,

நிலநடுக்கம் குறித்து தொலைபேசியில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மக்கள் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றதால் உயிரிழப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *