இலங்கையின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வரவிருக்கும் வரப்பிரசாதம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து அடுத்த அமைச்சரவைக்கு பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களுக்கு கொள்வனவு செய்யாது அரசாங்கத்தின் பெயரில் கொள்வனவு செய்து 5 வருடங்கள் பாவனையின் பின் அப்போதைய பெறுமதிக்கு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வாகனத்தை ஒப்படைக்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை, மாதாந்த கொடுப்பனவு அடிப்படையிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாகனத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் முறையையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்த்துள்ளது.

இலங்கையின் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 227 வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவது ஏன் என்று புரியவில்லை.

மேலும் 50 அம்பியூலன்ஸ், 50 கேப் ரக வாகனங்கள், 50 பவுஸர்களையும் கொள்வனவு செய்ய நிதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. 7 பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய லேட்குரூஷர் வாகனங்கள் 227 இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *