இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி -பெப்ரவரியில் வருகிறது கொரோனா தடுப்பூசி

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் வேகமாக பரவி வருகிறது.

தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் இலங்கையில் விநியோகிக்க முடியும் என்று ஒளடதங்கள் உற்பத்தி விநியோகம் மற்றும் தரக்கட்டுப்பாடு தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் இதனை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேபோல பிரித்தானியாவில் அங்கீகரிக்கப்பட்ட சைபர் என்ற கோவிட் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவது சிக்கலுக்குரியதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆராயப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பூசியானது, குறைந்த மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளுக்கு சிறந்த பெறுபேறுகளை வழங்கும் வகையில் அமையும் என தடுப்பூசி ஆய்வுகளை நடத்தும் இலங்கையை பூர்வீகத்தை கொண்ட டொக்டர் மஹேஷி ராமசாமி தெரிவித்துள்ளார்.

லண்டனிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவுடன் வீடியோ தொழில்நுட்பத்தில் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர், குறித்த தடுப்பூசியை பயன்படுத்த முடியும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தடுப்புக்கான மருந்தை கண்டுபிடிக்கும் செயற்பாட்டில் இலங்கையர் ஒருவர் இணைந்துள்ளமையை எண்ணி மகிழ்ச்சி அடைவதாக இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதன் பின்னர், தான் இலங்கைக்கு வருகைத் தர எதிர்பார்த்துள்ளதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானி மஹேஷி ராமசாமி தெரிவித்தார்.

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அவர், கொழும்பு விசாகா கல்லூரியில் கல்வி பயின்றுள்ளதுடன், தனது சாதாரண தர பரீட்சையை ஸ்டெப்ர்ட் சர்வதேச கல்லூரியில் எழுதியுள்ளார்.

அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *