Windows 11-க்கு மாற நினைப்பவர்களுக்கு HP நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

Windows 10 இயங்குதளத்தில் இருந்து Windows 11-க்கு மாற நினைப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி HP நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

பெரும்பாலான கணினிகளில் Microsoft நிறுவனத்தின் Windows இயங்குதளமே பயன்பட்டு வருகிறது.
அதிலும் Windows 10 தற்போது பிரபலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
Microsoft இன் Windows 11 இயங்குதளம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானவுடன் பலரும் அதற்கு மாறி வருகின்றனர்.
இந்நிலையில்,

Windows 11 இயங்குதளத்திற்கு மாறும் HP LapTop பயன்பாட்டாளர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
Hp LapTop இல் Windows 10-ல் இருந்து Windows 11-க்கு மாறுபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Windows 11-ன் Dupilicate Installer (போலி நிறுவி) இணையத்தில் உலவி வருகிறது.
அதனை பயன்படுத்தி Windows 11 னை இன்ஸ்டால் செய்பவர்களின் LapTop  களை Redline(ரெட்லைன்) என்ற Overlay(மேல்வேர்) தாக்குகிறது.
இதன்மூலம் பயன்பாட்டாளர்களின் Password உள்ளிட்ட தகவல்கள் திருடப்படுகின்றன.
Microsoft போன்ற போலி Domain கள் மூலம் இந்த மேல்வேர் பரப்பப்படுகிறது.
இந்த போலி தளம் பார்ப்பதற்கு  Windows 11 இணையதளம் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதனால் Windows 11 Download செய்ய நினைக்கும் பயனாளர்கள் Domain பெயரை சரிபார்ப்பது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *