ஹோண்டா ஹார்னெட் 2.0 ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்
ஹோண்டா நிறுவனத்தின் ஹார்னெட் 2.0 ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஹார்னெட் 2.0 ரெப்சால் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்தியாவில் புதிய ரெப்சால் எடிஷன் விலை ரூ. 1.28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மோட்டார்சைக்கிள் லிமிட்டெட் எடிஷனாக கிடைக்கிறது. இந்த மாடல் பெயின்டிங் ஹோண்டா ரெப்சால் ரேசிங் அணியில் இருப்பது போன்று செய்யப்பட்டு இருக்கிறது. இது மற்ற ஹார்னெட் மாடலை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
இதுதவிர, புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஹார்னெட் 2.0 மாடலில் 184 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 16.1 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. சஸ்பென்ஷனிற்கு முன்புறம் அப்சைடு-டவுன் போர்க்குகள், பின்புறம் பிரீலோட்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோ-ஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் இருபுறங்களில் டிஸ்க் பிரேக் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.