கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!
ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பலர் இந்த நாட்களில் வருவதே இதற்குக் காரணம என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி,
இந்த இரண்டு பணி நேரங்களும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும்,
மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படும்.
இதேவேளை,
நாளை (13/06/2022) வழமை போன்று திறக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை (13ஆம் திகதி) விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும்,
அத்தியாவசிய சேவைகள் இடையூறு இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக திணைக்களம் திறந்திருக்கும்,
திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகம் நாளை திறந்திருக்கும் என்பது மேலும் குறிப்பிட வேண்டியது.