புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று!!

2021 ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை இன்று இரவு வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

பரீட்சைப் பெறுபேறுகளை https://www.doenets.lk/examresults என்ற இணையதளம் அல்லது https://www.exams.gov.lk/examresults என்ற இணையதளம் வழியாகப் பார்வையிட முடியும்.

2021ஆம் ஆண்டு தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதியன்று நடைபெற்றது.

குறித்த பரீட்சையில் தமிழ் மொழிமூலத்தில் 85,446 மாணவர்களும், சிங்கள மொழிமூலத்தில் 255,062 மாணவர்களும், மொத்தமாக 340,508 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

குறித்த பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றதுடன்,

கொரோனாத் தொற்றுக்குள்ளான மாணவர்களுக்காக, 108 விசேட பரீட்சை நிலையங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *