தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லையா?…… இறுதி முடிவு இன்று!!
நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்று(24) தீர்மானிக்கப்படுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளுக்கு, சுகாதார அமைச்சு கடிதம் மூலம் தீர்வு யோசனையை அனுப்பியுள்ள நிலையில்,
இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ள சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இன்றைய கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து, தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.