அரச உத்தியோகத்தர்களுக்கு அரச வீட்டுத்திட்டம் – அங்கஜன் இராமநாதன்..!!!

நடைபெறபோகும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் சந்தர்பத்தில் சகல அரச நிலை உத்தியோகத்தர்களுக்கும் முன்னேப்போதும் இல்லாதவாறு சுயகெளரவம் வழங்கப்படும் என்பதில் ஐயம் இல்லை என்று ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் விவசாய பிரதியமைச்சருமான அங்கஜன் இராமநாதன் காரைநகர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

அரச சுற்றுநிரூபங்கள் முறையாக செயற்படுத்தபட்டு உத்தியோகத்தர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் இதன் மூலம் அரச உத்தியோகத்தர்கள் பயமின்றி தமது பணியை மேற்கொள்ளலாம், அரச உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகளில் உள்ள தடைகள், சம்பள ஏற்றத்தாழ்வுகள் போன்றன பிரச்சனைகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், முறையான இடமாற்ற கொள்கையை பின்பற்றுவதன் ஊடாக உத்தியோகத்தர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும், ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் அனுபவிக்கும் சலுகைகள் போன்று யாழ், கிளிநொச்சி மாவட்டங்களிற்கு அச்சலுகைகள் கிடைக்க ஆவண செய்யப்படும் எனவும் அரசியல் பழிவாங்கலுக்குட்பட்ட அலுவலர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க வழியமைக்கப்பட்டு

சட்டவரையறைக்கு உட்பட்ட சுதந்திரமான அரச சேவைக்கு வழிவகை செய்யப்படும், எமது காலத்தில் அரச உத்தியோகதர்களுக்கு அரச வீடமைப்பு திட்டமும் நீண்ட கால இலகு கடன் திட்டமும் வழங்கப்படும், இது போன்ற திட்டமைப்புக்கள் மூலம் அரசாங்க உத்தியோகதர்கள் தமது பணியை திறம்பட  மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap