பிரான்ஸ் செல்ல காத்திருப்போருக்குக்கு அந்நாட்டு அரசிடமிருந்து மகிழ்ச்சியான அறிவிப்பு!!
பிரான்ஸ் செல்லவுள்ளோருக்கு அந்நாடு மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்துள்ளது.
இதன்படி,
ஓகஸ்ட் முதலாம் திகதி முதல்அனைவருக்கும் கொவிட் தொடர்பான அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அனைத்துப் பயணிகளும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்
இனி தடுப்பூசி பெற்றதற்கான அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரத்தையோ
அல்லது கொவிட் பரிசோதனை செய்துகொண்டதற்கான ஆதாரத்தையோ பிரான்சுக்குள் நுழையும் முன் சமர்ப்பிக்கவேண்டியதில்லை.
மேலும்,
அவர்கள் என்ன காரணத்துக்காக வேண்டுமானாலும் பிரான்சுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.