எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள அறிவிப்பு!!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த, டீசல் 11 நாட்களுக்கும், பெற்றோல் 10 நாட்களுக்கும் மாத்திரமே போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்திருந்த நிலையிலேயே அமைச்சர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் அதுதொடர்பில் தானே பொதுமக்களுக்கு அறியத்தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகாித்த போதும் அதுதொடர்பில் மக்களுக்கு நேரடியாக அறிவித்திருந்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்