நாடாளுமன்றில் நடைமுறைப்படுத்தப்பட்டது எரிபொருள் விலை சூத்திரம்….. விலை குறைப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சரிடமிருந்து திடுக்கிடும் அறிவிப்பு!!

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள்களின் விலை இன்று(01/09/2022) குறைக்கப்படுமா என்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதன்படி,

எரிபொருள்களின் விலை இன்று(01/09/2022) குறைக்கப்பட மாட்டாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்

எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஒவ்வொரு மாதமும் 01 மற்றும் 15 ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என்றும் அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும்,

எரிபொருள் விலை சூத்திரம் இன்று(01/09/2022) நடைமுறைப்படுத்தப்பட்டாலும்,

எரிபொருள் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை என கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சர்வதேச எரிபொருளின் விலை தற்போது குறைந்துள்ள போதிலும்

இலங்கை ஏற்கனவே எரிபொருளை முன்னைய செலவினங்களின் கீழ் இறக்குமதி செய்துள்ளதால் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது என அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய இறக்குமதி செலவுகள் காரணமாக விலை குறைய வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,

எரிபொருள் விலை சூத்திரம் நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால்

எதிர்காலத்தில் பொதுமக்கள் நன்மைகளையும் சலுகைகளையும் பெறுவார்கள் என நான் நம்புகின்றேன் என எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *