உரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வு….. அமைச்சர் திலும் அமுனுகம!!

விவசாயிகளின் உரப் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

 

படிப்படியாக மாவட்டங்களுக்கான உரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது போதிய அளவு உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து வந்த உரங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஆகவே அந்த விடயம் பற்றி கருத்து தெரிவிக்க தேவையில்லை.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்கின்ற அதிகளவான பேருந்துகள் வீதி போக்குவரத்து அனுமதிப் பத்திரங்கள் இல்லாமல் செல்கின்றன.

அதற்கான தீர்வுகளும் மிக விரைவில் எடுத்துக் கொடுக்கப்படும் அவர்கள் இதுவரை எங்களிடம் வீதி அனுமதிப்பத்திரம் சம்பந்தமாக பேசவில்லை.

அவர்கள் பேசும் பட்சத்தில் அவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். இலங்கையிலேயே மிகவும் போற்றத்தக்கவர்கள் சாரதிகள் அவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வானது அவர்களது சேவை காலத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எமது அமைச்சின் ஊடாக ஓய்வுபெற்ற சாரதிகளுக்கு ஒரு பாஸ் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்நாள் வரை அந்த பாஸ் மூலம் இலங்கை போக்குவரத்து பஸ் சேவையில் அவர்கள் பயணம் செய்யலாம்.

அவர்களுக்கு நாங்கள் வழங்கும் ஒரு கௌரவமாக இதை கொடுக்கின்றோம்.

சாரதிகள் மிகவும் போற்றத்தக்கவர்கள் எதிர்கால சந்ததியினருக்கும் அவர்கள் நல்வழி காட்டிகளாக இருக்க வேண்டும் கொரோனா காலத்திலும் பல சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றியவர் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *