பேஸ்புக் வாட்ஸ் அப் டுவிட்டர் போன்றவைகளுக்கு தடை! மத்திய அரசு விடுத்த நோட்டீஸ்!!
இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகியவை முக்கிய சமூக வலைதளங்களாக உள்ளன. இதில் பலரும் சொந்த கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.
அதேநேரத்தில் போலியான தகவல்கள், வதந்திகளும் பரவிவருவது சில நேரங்களில் ஆபத்தாக முடிந்துவிடுகிறது.
இதனிடையே, மத்திய அரசின் புதிய விதிகளுக்கு பதிலளிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவடைவதால் இன்றுக்குள் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பதிலளிக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் புதிய விதிகளை ஏற்படுத்தி, இந்த புதிய விதிகள் குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸ்களுக்கு பதிலளிக்காத சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு தற்போது செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…
மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவது குறித்து பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இன்னும் பதிலளிக்கவில்லை என தெரிகிறது.
மேலும், மத்திய அரசின் புதிய விதிகளுக்கு பதிலளிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவடைவதால் இன்றுக்குள் பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பதிலளிக்குமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.