நீடிக்கப்பட்ட ஊடரங்குச் சட்டம் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தீர்மானித்துள்ளார் என மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ட்விட்டர் பாட்டிவை பார்வையில் இங்கே சோடக்குக