கதிரவெளி கடற்கரையில் வெடிப்பொருட்கள், 750 தோட்டக்கள், துப்பாக்கிகள் என பல ஆயுதங்கள் மீட்பு!!
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் கதிரவெளி கடற்கரையில் வெடிப்பொருட்கள் சிலவற்றை நேற்றுமுன்தினம் (16/09/2022) வெள்ளிக்கிழமை மீட்டுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இடம்பெற்ற குறித்த தேடுதல் நடவடிக்கையின் போதே வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்த காலத்தின் போது காளிகோயில் வீதியில் உள்ள கதிரவெளி கடற்கரையில் விடுதலைப்புலிகளின் கடற்படை முகாம் அமைந்திருந்த இடத்தில் இருந்தே துப்பாக்கி ரவைகள், மகசின் கூடுகள் மற்றும் வெடிப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.
குறித்த கடற்கரை பிரதேசத்தில் வெடிப்பொருட்கள் இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து அவற்றினை அகற்றி தருமாறு வாகரை காவல்துறையினர் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற அனுமதியினை நாடியிருந்தனர்.
அதன் பொருட்டு,
நீதிமன்றம் வழங்கிய அனுமதியின் பிரகாரம் நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் வாழைச்சேனை உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.டி.டி.நிலங்க வாகரை நிலையப் பொறுப்பதிகாரி மகதே மகிந்தவிஜயவர்த்தன ஆகியோர் குறித்த இடத்திற்கு வருகை தந்தனர்.
விசேட அதிரடிப்படையின் குண்டு செயல் இழக்கும் பிரிவினர் அடையாளம் காணப்பட்ட இடத்தில் ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- கைக்குண்டு – 01
- பரா – 01
- மிதி வெடி – 01
- 50 ரக தோட்டாக்கள்
- தோட்டக்கள் போடும் பட்டி – 100
- தோட்டக்கள் – 750
- ரி56 ரக துப்பாக்கி
- ரவைக் கூடு – 14
- 0.5 ரக தோட்டக்கள் – 76
இதன்போது,
மீட்கப்பட்ட வெடிப் பொருட்ளில்,
கைக்குண்டு -01, பரா-01, மிதி வெடி -01 என்பன பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அவை அனைத்தும் சம்வப இடத்தில் பாது காப்பு கருதி நீதிபதியின் அனுமதியுடன் அனுமதியுடன் அவர் முன்னிலையில் செயலிழக்கச் செய்யப்பட்டது.
ஏனைய பொருட்கள் அனைத்தும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.