37 மாணவர்களுக்கு அவசர பி.சி.ஆர் பரிசோதனை! 6 பேருக்கு தொற்று உறுதி
அங்குனகொலெவேவ – லுனுகம்வெஹெரவிலுள்ள பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்று பெண்கள் மற்றும் 3 ஆண் மாணவர்களே இவ்வாறு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 37 மாணவர்களுக்கு அவசர பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் குறித்த 6 பேரும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்கள் ஹம்பாந்தோட்டை பொது மருத்துவமனை மற்றும் எரமினியாய கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இவர்களுடைய குடும்ப உறவினர்கள் உட்பட 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.