இலங்கைக்கு நன்கொடையாக கிடைத்துள்ளது….. “உலகின் மிகவும் ஆபத்தான பறவை” என்று அறியப்படும் “Double Wattled Cassowary”!!

உலகின் மிகவும் ஆபத்தான பறவையினத்தில் இரண்டாவது இடத்தில் உள்ள இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று பறவைகள் பெறப்பட்டுள்ளன.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த பறவைகள் கொண்டுவரப்பட்டன.

காசோவரி பறவை சுமார் ஐந்து அடி உயரம் வரை வளரும் மற்றும் சுமார் 60 கிலோ எடை கொண்டது.

இது பெரும்பாலும் “உலகின் மிகவும் ஆபத்தான பறவை” என்று

பெயரிடப்பட்டுள்ளது.

தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவிற்கு பறவைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதில் இரண்டு ஆண் பறவைகளும் ஒரு பெண் பறவையுமே இவ்வாறு பெறப்பட்டுள்ளன.

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் குரங்குகள், காட்டுப் பறவைகள் மற்றும் பாம்புகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகளையும் இலங்கை ஏற்றுமதி செய்ய உள்ளது.

தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள கெசோவரி (Cassowary) பறவைகள் இன்னும் ஒரு மாதத்தின் பின்னர், பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெஹிவளை மிருக காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் தினுசிக்கா மானவடு தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(06/07/2023) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள குறித்த பறவைகள் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *