சவூதியில் திடீரென உயிரிழந்த இலங்கை நபர்

திருகோணமலை – கந்தளாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக சவூதி அரேபியாவில் இன்று (29) திடீரென உயிரிழந்துள்ளார்.

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக உயிரிழந்துள்ள நபரின் மனைவிக்கு இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹையூன் என்ற 53 வயதுடைய ஒருவரே சவூதியில் உயிரிழந்துள்ளார்.

சவூதி அரேபியாவில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையிலே இவர் உயிரிழந்துள்ளதாகவும், சடலத்தினை நாட்டுக்கு கொண்டுவருவதா அல்லது சவூதியில் நல்லடக்கம் செய்வதா போன்ற நடவடிக்கைகளை தூதரகம் ஊடாக உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap