அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்து! சுகாதார அமைச்சு எச்சரிக்கை!!
அடுத்துவரும் 6 வாரங்கள் இலங்கைக்கு ஆபத்துமிக்கது. எனவே சுகாதார வழிகாட்டில்களை பின்பற்றி மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
நாட்டின் தற்போதைய நிலைமை என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் . அதனை எதிர்கொள்ள மக்களை கூடிய வகையில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற ஊக்குவிக்க வேண்டும்.
இலங்கையை பொறுத்த வரையில் 51 வீதமானோருக்கு முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்க முடியும்.
இந்த காலகட்டம் தான் மிகவும் நெருக்கடியானது. ஏற்படக் கூடிய மரணங்களை தவிர்க்க அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தி செயற்படுகின்றது.
தொற்றாளர்களில் 80 வீதமானோருக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் காணப்படுவதில்லை. இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும் என்றார்.